Aran Sei

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சமஸ்கிருத மொழியில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) ஆகியவை இணைந்து இத்திட்டத்தை தொடங்கியுள்ளன.

இதுவரை இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே விமான நிலையத்தில் அறிவிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை (17-06-2022) முதல் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹிட்லரையே பிரதமர் மோடி மிஞ்சிவிட்டார் – காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் விமர்சனம்

“வாரணாசி விமான நிலையத்தில் ஆங்கிலம் மற்றும் இந்திக்குப் பிறகு, சமஸ்கிருதத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைந்தவுடன், அவர்கள் சமஸ்கிருத மொழியின் மையத்திற்குள் நுழைந்ததாக உணருவார்கள்” என்று வாரணாசி விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விமான நிலைய இயக்குநர் ஆர்யாமா சன்யால் கூறுகையில், “பழங்காலத்திலிருந்தே சமஸ்கிருதத்தின் மையமாக வாரணாசி இருந்து வருகிறது.  மேலும், மொழிக்கு மரியாதை அளிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சமஸ்கிருத ஒளிபரப்பின் கிளிப்புகள் சமூக வலைதளத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

அக்னிபத் விவகாரம்: மக்களிடம் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளது – மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பயனர் ஒருவர் “வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருத மொழியில் அறிவிப்பு வெளியிடப்படுவது மகிழ்ச்சி  அளிக்கிறது. சமஸ்கிருதத்தை பொது மொழியாக்க இது ஒரு நல்ல முயற்சி. வாரணாசி ரயில் நிலையத்திலும் இது நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“பள்ளியில் சமஸ்கிருதத்தை விருப்ப மொழியாக தேர்ந்தெடுத்ததற்கு நான் எப்போதும் வருந்துவேன். எனது அடுத்த பயணத்தில்  விமான நிலைய ஊழியர்களிடம் எனது சமஸ்கிருத திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்,” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

டெல்லி : அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம்

உள்ளூர் போஜ்புரி மொழியை அதிகாரிகள் ஏன் தேர்வு செய்யவில்லை என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். “பயணிகளுக்காக அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. எத்தனை பேருக்கு சமஸ்கிருதம் புரியும்? அதை ஏன் போஜ்புரியில் செய்யக் கூடாது? வாரணாசியின் அசல் தாய்மொழி போஜ்புரிதான்” என்று ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

source: ndtv

பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath | Bulldozer Baba

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்