வந்தே பாரத் ரயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி மூன்றாவது முறையாக சேதமடைந்துள்ளது.
மராட்டியத்தின் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த ரயில் மீது மாடு மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், ரெயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிதளவு சேதமடைந்தது. இதனையடுத்து ரயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலம் இந்த மாதத்தில் (அக்டோபர்) 3-வது முறையாக வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது.
முன்னதாக, கடந்த 6-ம் தேதி வத்வா ரயில் நிலையத்திலிருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது காட்டெருமை கூட்டம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது.
இதேபோல், கடந்த 7-ம் தேதி மீண்டும் கால்நடை மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Source : the hindu
பந்த் இல்லனு பம்மிய ஆட்டுக்குட்டி | பல்பு வாங்கிய வானதி அக்கா | Aransei Roast | Annamalaibjp
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.