பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 17) இரவு, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்திலுள்ள காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது மேடையில் பேசிய அவர்,“வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த் கடைசியில், ’என்னிடம் வாடகை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கு வரவில்லை.’ என்று கூறிவிட்டார். உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டிடிவி தினகரன் தான்.” என்று தெரிவித்துள்ளார்.
’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி
மேலும் “ பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனென்றால், ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுகள் போட்டுள்ளேன். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு நல்ல பெண்ணாக இருப்பதால் பிழைத்து போகட்டும் என்று ஐந்து ஓட்டுகள் போட்டேன். அரசியல் களம் பிக்பாஸ் அல்ல. மூன்று கோடி நான்கு கோடி ஓட்டுகள் விழுவதற்கு.” என்று அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.