உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவை ஆதிக்கச்சாதி மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதே அரசுப்பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவை ஆதிக்கச்சாதி மாணவர்கள் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் சமையல்காரர் சுனிதா தேவி சமைத்த உணவை மீண்டும் சாப்பிட ஏழு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மறுத்துவிட்டதாக பள்ளி முதல்வர் பிரேம் சிங் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சம்பாவத் மாவட்ட மாஜிஸ்திரேட் நரேந்தர் சிங் பண்டாரி, ஆதிக்கச்சாதி மாணவர்களின் பெற்றோருடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் அவர்களின் குழந்தைகள் மத்திய உணவு சாப்பிடுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மதிய உணவை நிராகரித்த பட்டியல் சமூக மாணவர்கள் – பள்ளியில் காட்டப்படுகிறதா சாதியப் பாகுபாடு?
இதேபோல் பள்ளி முதல்வரும், ஆதிக்கச்சாதி மாணவர்களின் பெற்றோருடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடவில்லை என்றால் அவர்களை பள்ளியிலிருந்து நீக்கி விடுவோம் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளிடம் மதிய உணவு சாப்பிடுவது குறித்துப் பேசுவதாக உறுதியளித்தனர் என்று பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
2021 டிசம்பர் மாதத்தில், இதே அரசுப் பள்ளியில் 6 – 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 43 மாணவர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்த சமையல்காரர் சுனிதா தேவி சமைத்த மதிய உணவைச் சாப்பிட மறுத்துள்ளனர். அதனால் சுனிதா தேவி அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தனது பணிநீக்கத்தை எதிர்த்து சுனிதா தேவி எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
“நான் சமைத்த உணவை சாப்பிட தயாராக இல்லாத மாணவர்கள் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நாம் சமைத்த உணவை சாப்பிட தயாராக உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உணவு சமைக்குமாறு பள்ளி நிர்வாகம் என்னிடம் கேட்டுள்ளது” என்று சுனிதா தேவி தெரிவித்துள்ளார்.
Source : indianexpress
சவுக்கை சுழற்றும் நெஞ்சுக்கு நீதி | Nenjukku Neethi Review | Udhayanidhi Stalin
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.