Aran Sei

உத்தரகாண்ட்: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த பாஜக மாநில அரசு

த்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவும் அது தொடர்புடைய சட்டங்களைச் சரி பார்க்கவும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழுவை உத்தரகாண்ட் அரசு அமைத்துள்ளது.

தற்போது இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் தலைவராக உள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பூர்வீக இந்தியர்களா, ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா? – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்வால் ஆகியோர் குழுவில் செய்லபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் வசிக்கும் மக்களின் தனிப்பட்ட விஷயங்களைக் கட்டுப்படுத்தும் தொடர்புடைய அனைத்துச் சட்டங்களையும் சரிபார்ப்பதற்கும், தற்போதைய சட்டங்களில் திருத்தங்கள் குறித்த அறிக்கையைத் தயாரிப்பதற்கும் ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்” என்று மாநில உள்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா: இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்த இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

முன்னதாக மார்ச் மாதம், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாநிலத்தில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருந்தார்.

Source: Theindianexpress

சம்பவம் செய்த Stalin அலறித்துடிக்கும் Annamalai | Modi Chennai Visit

உத்தரகாண்ட்: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த பாஜக மாநில அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்