தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை சேகரித்து தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியுள்ளார். அவர் பேசியது சர்ச்சையானதால் தேசியக் கொடியேற்றப்படாத வீடுகளின் புகைப்படங்களைக் கோருவது கட்சித் தொண்டர்களுக்கானது மட்டுமே தவிர பொதுமக்களுக்கானது அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியான. இதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த சர்ச்சை தொடர்பாக பாஜக தலைவர் மகேந்திர பட் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ” பிரதமரின் அழைப்புக்கு அவர்கள் ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டும் என்பதால் எனது அறிக்கை கட்சி ஊழியர்களுக்காக மட்டுமே இவ்வாறு தெரிவித்தேன். இந்த நாட்டைப் மீது தேசத்தின் மீது பற்று கொண்ட எவருமே தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றத் தயங்க மாட்டார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை ” என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு தூக்கு மேடைக்குச் சென்றனர். ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விழாவைக் கொண்டாட எந்த ஒரு இந்தியனும் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவதில் ஏன் சிக்கல்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்
கொடியை வாங்க மக்களிடம் பணமில்லை என்ற காங்கிரஸின் வாதத்தில் அர்த்தமில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தேவையில்லாமல் அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டினார். தேசியக் கொடியை வாங்க முடியாத பட்சத்தில் பலர் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை முடியாது என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மூவர்ண யாத்திரை நடத்துவது தொடர்பான கேள்விக்கு, “இந்தியாவின் சுதந்திரத்திற்கான மாபெரும் போராட்டத்தைக் கொண்டாடும் எதைவும் பாராட்டத் தக்கது” என்று உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் குறிப்பிட்டுள்ளார்.
Source: ndtv.
kallakurichi Sakthi School Maths Teacher Affidavit vs Shanthi Statement | kallakurichi Case | Deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.