Aran Sei

உத்தரகாண்ட்: ஆணவக்கொலை செய்யப்பட்ட பட்டியல் சமூக இளைஞர் – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

த்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஆதிக்கச்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பெண்ணின் தாயார் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனுவாதோகான் கிராமத்தைச் சேர்ந்த தலித் அரசியல் செயற்பாட்டாளர் ஜெகதீஷ் சந்திரா  நேற்று (02.09.2022) பிகியாசைன் நகரில் நிறுத்தப்பட்டுள்ள காரில் இறந்து கிடந்தார் என்று தாசில்தார் நிஷா ராணி தெரிவித்துள்ளார்.

அவரது உடலில் 25 காயங்கள் இருந்தன. மேலும் அவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

ஜெகதீஷ் சந்திராவின் மாமியார்( ஆதிக்கச்சாதி பெண்ணின் தாய்), மற்றும் அவரது உறவினர்கள்  உயிரிழந்த ஜெகதீஷ் சந்திராவின் உடலை அப்புறப்படுத்துவதற்காக காரில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர்  என்றும்  அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக தாசில்தார்  தெரிவித்துள்ளார்.

ஜெகதீஷ் சந்திராவும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண்ணும் கடந்த  ஆகஸ்ட் 21 அன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜெகதீசை அவரது மாமியார் ஷிலாபானி பாலத்தில் இருந்து கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது  என்று  தாசில்தார் நிஷா ராணி கூறியுள்ளார்.

2021 இல் உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சி வேட்பாளராக சால்ட் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெகதீஷ் சந்திரா தோல்வியடைந்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மடாதிபதி மீது பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும் – சித்தாராமையா வலியுறுத்தல்

கடந்த ஆகஸ்ட் 27 அன்று, தம்பதியினர் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியதாக உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சித் தலைவர் பிசி திவாரி கூறியுள்ளார்.

தம்பதியின் புகாரின் பேரில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், சந்திராவை காப்பாற்றியிருக்கலாம் என்றும் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த கொலை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அவமானம் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சித் தலைவர் பிசி திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணி தெளித்த PTR | கிடா விருந்து அமோகம் | Salem Dharanidharan Interview | Annamalai | PTR | DMK

உத்தரகாண்ட்: ஆணவக்கொலை செய்யப்பட்ட பட்டியல் சமூக இளைஞர் – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்