Aran Sei

உத்தரகாண்ட்: வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

த்தரகாண்ட் மாநிலத்தில் குடியேறியுள்ள வெளிமாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய 201 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 21 துவங்கி 10 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 21 ஆம் தேதி மலைபகுதிகளில் வசிக்கும் 4,094 வெளிமாநிலத்தவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 32 தொழிலாளர்கள், 97 வியாபாரிகள் மற்றும் 46 குத்தகை தாரர்கள் உட்பட சந்தேகத்திற்கிடமான 201 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகத்திற்குரிய 201 நபர்கள் மீதும் தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் பகைமுரண் கவலையளிக்கிறது – காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து அல்லாதவர்களுக்குச் சொந்தமாக வீடுகள், நிலங்கள் இல்லை என்பதையும், அவர்கள் தொழில் எதுவும் நடத்தவில்லை என்பதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். மாநில நில சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சி அமைப்பாளர் சுவாமி ஆனந்தஸ்வரூப் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

“இந்த தர்ம சன்சத்தின் முடிவு கடவுளின் வார்த்தையாக இருக்கும், அதை அரசாங்கம் கேட்க வேண்டும். அப்படி அரசு கேட்கவில்லை என்றால் 1857 ஆம் ஆண்டில் நடந்த கிளர்ச்சியை விட மிக மோசமான ஒரு போரை நாங்கள் நடத்துவோம். அரசுக்கு எதிராக போர் தொடுப்போம்” என்று 2021 டிசம்பரில் நடந்த தரம் சன்சத் நிகழ்ச்சியில் ஆனந்தஸ்வரூப் பேசியது சர்ச்சையை உருவாக்கியது.

‘சிறுபான்மையினர் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்களென பாஜக ஆளும் மாநிலங்களில் பலகை வைக்கிறார்கள்’ – சரத் பவார் குற்றச்சாட்டு

உத்தரகாண்ட் மாநிலம் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது, அது பாதுகாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த கணக்கெடுப்பு இயக்கத்தின் கீழ், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டறிந்து அவர்களின் பின்னணியைச் சரிபார்ப்போம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதாக உத்தரகாண்ட் மாநில காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் கரிமா தசௌனி தெரிவித்துள்ளார்.

Source : NDTV

மரண படுக்கையிலிருந்து Congress எழுமா?

உத்தரகாண்ட்: வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்