இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக அரசின் நிலைப்பாடு என்ன என்று உத்தரக்கண்ட் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று (பிப்பிரவரி 21), இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜிதேந்திர நாராயண் தியாகி என்கிற வாசிம் ரிஸ்வியின் பிணை மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சி.குல்பே, பிப்ரவரி 23ஆம் தேதிக்குள் மாநில அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஹரித்வாரைச் சேர்ந்த நதீம் அலி அளித்த புகாரின் பேரில் ஜிதேந்திர நாராயண் தியாகி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை ஹரித்வாரில் இந்து சாமியார்களால் தர்ம சன்சத் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடத்துவதற்கு நிகழ்ச்சி பங்கேற்பாளர்களைத் தூண்டியதாக அப்புகாரில் கூறியிருந்தார்.
மேலும், புனித குர்ஆன் மற்றும் முகமது நபிக்கு எதிராக அவதூறுகளை பரப்பியதாகவும் நதீம் அலி குற்றஞ்சாட்டியிருந்தார்.
தர்ம சன்த் நிகழ்ச்சியின் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி, கடும் கண்டனங்களை பெற்றது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.