Aran Sei

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மகன் கைதானதால் பாஜக முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்

த்தரகாண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மகன் கைதானதால் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா கைதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வினோத் ஆர்யாவை பாஜகவிலிருந்து கட்சி மேலிடம் நேற்று நீக்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவர் முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண் படுகொலை – கைதான பாஜக தலைவரின் மகன்

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், அங்கிதாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் விசாரணையின்போது வரவேற்பாளர் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்று தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிதாவின் உடலையும் காவல்துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

அங்கிதாவை புல்கித் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய நிலையில், அங்கிதா அதை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பான வாக்குவாதம் காரணமாகவே அங்கிதாவை புல்கித் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அங்கிதா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்துத் தள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி விடுதியின் குறிப்பிட்ட பகுதிகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளினர்.

உத்தரகாண்ட்: பெண்ணை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பாஜக தலைவரின் மகன் – வாட்ஸ் அப் உரையாடலில் அம்பலம்

இதனிடையே புல்கிட்டின் தந்தை வினோத் ஆர்யாவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை பாஜகவிலிருந்து கட்சி மேலிடம் நேற்று நீக்கியுள்ளது. மேலும், புல்கிட் ஆர்யாவின் சகோதரனான அங்கித் ஆர்யாவையும் கட்சியிலிருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.

Source : economictimes

வைச்ச செங்கலை கூடக் காணோம் | பாஜகவின் மதுரை AIIMS காமெடிகள் | Aransei Roast | BJP | DMK | MADURAI

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மகன் கைதானதால் பாஜக முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்