உத்தராகண்ட் மாநிலத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறி அமைதியை சீர்குலைப்பதாக புகார்கள் எழுவதால் பிறமாநிலங்களில் இருந்து உத்தராகண்டில் குடியேறியவர்களின் விவரங்களை சரிப்பார்ர்க்க உள்ளதாக மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏற்கெனவே அவர் அளித்த பேட்டியில், “உத்தராகண்ட் மாநிலத்துக்கு தனி கலாச்சாரம் உள்ளது. அதை பாதுகாக்க வேண்டும். அதற்காக, உத்தராகண்டில் வந்து குடியேறிய பிற மாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்க உள்ளோம். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் பற்றி தெரியவந்தால் அவர்கள் பின்னணி குறித்து ஆராயப்படும். அவர்களைப் போன்றவர்கள் உத்தராகண்ட்டில் தங்கி அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தராகண்டில் வந்து குடியேறியுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள், பின்னணி குறித்து சரிபார்க்கும் பணியை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
”முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வு நடத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பின்னணியை நாங்கள் சரிபார்க்கிறோம். மாநிலத்தில் சாலையோரக் கடைகளை நடத்தும் வியாபாரிகள் மற்றும் பிறரின் பின்னணி ஆய்வும் இதில் அடங்கும்” காவல் துறை தலைமை இயக்குநர் குமார் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமானவர்கள் மீது காவல்துறை கடுமையான கண்காணிப்பை வைத்திருப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார். “மாநிலத்தில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் எல்லோரும் காவல்துறை கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள். அவர்கள் மாநிலத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைத்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல் துறை தலைமை இயக்குநர் குமார் கூறியுள்ளார்.
ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து
“சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்” சமூக ஊடக பதிவுகளையும் காவல்துறையினர் கண்காணிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அங்கீகாரம் இல்லாமல் தங்கியுள்ளவர்களை சரி பார்க்கவே பிற மாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு
மேலும், சார்தாம் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கவே இந்நடவடிக்கை என்று அரசு தெரிவித்துள்ளது.
Source: timesofindia.indiatimes.com
குடியரசுத் தலைவர் ஆகிறாரா இளையராஜா – பத்திரிகையாளர் ஜென்ராம் விளக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.