Aran Sei

உத்தரகாண்ட்: பெண்ணை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பாஜக தலைவரின் மகன் – வாட்ஸ் அப் உரையாடலில் அம்பலம்

த்தரகாண்ட்டில் பாஜக தலைவரின் மகனால் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள பெண்ணின் வாட்ஸ் ஆப் செய்திகள் பரவி வருகிறது.

அதில்,  பாதிக்கப்பட்ட பெண்ணை பாஜக தலைவரின் மகன் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியது அம்பலமாகியுள்ளது. தன்னுடைய நண்பருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியில் “அவர்கள் என்னை ஒரு விபச்சாரியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண் படுகொலை – கைதான பாஜக தலைவரின் மகன்

பாதிக்கப்பட்ட பெண்ணின் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் பரவி வருகின்றன, அங்கு அவர் வாடிக்கையாளர்களுக்கு ₹ 10,000க்கு பெற்றுக்கொண்டு “சிறப்புச் சேவை” செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த செய்திகள் பாதிக்கப்பட்டவரிடமிருந்தே வந்ததாகக் கூறுவதாகவும், ஆனால் இன்னும் கடுமையான தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் ரிசார்ட் ஊழியரிடம் பேசியதாக கூறப்படும் அழைப்புப் பதிவின் ஆடியோ கிளிப்பும் பரவலாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்  அலைபேசியில் அழுவதும், மற்றவரிடம் தன் பையை மேலே கொண்டு வரச் சொல்வதும் அந்த ஆடியோவில் கேட்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது – பாஜக தலைவரை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

இன்று காலை கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட அவர், விருந்தினர்களுக்கு “சிறப்பு சேவை” வழங்குமாறு ரிசார்ட் உரிமையாளரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக உத்தரகாண்ட் உயர் காவல்துறையைச் சேர்ந்த அசோக் குமார் கூறியுள்ளார் .

இந்த “மோசமான செயற்பாடுகள்” ஸ்பா சிகிச்சை என்ற போர்வையில் வழங்கப்பட்டது என்பதையும் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய தோழிக்கு அனுப்பிய செய்திகளின் தொனியும் உள்ளடக்கமும் அவர் ரிசார்ட்டில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்ததையும், தொடர்ந்து அங்கு வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும் குறிக்கிறது.

அக்.2இல் தமிழகம் முழுதும் விடுதலைச் சிறுத்தைகளின் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் – திருமாவளவன் அறிவிப்பு

முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் முன்னணி பிரமுகர் வினோத் ஆரியா. இவர்  முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு புல்கித் ஆர்யா என்ற மகன் உள்ளார். புல்கித் ஆர்யா, லக்ஷமன் ஜூலா என்ற பகுதியில் வனந்த்ரா என்ற பெயரில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்தான் புல்கித்துக்கு சொந்தமான ரிசார்ட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ரிசார்ட்டிற்கு வேலைக்குச் சென்ற அங்கிதா, வீடு திரும்பாமல் மாயமாகியுள்ளார். இதனால்,  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், குடும்பத்தினர் மற்றும் சமூக வலைத்தளங்களின் தொடர் அழுத்தம் காரணமாக காவல்துறை புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் புல்கித் ஆர்யா உண்மையை மறைக்கும் விதமாக மழுப்பி பேசி வந்த நிலையில், பின்னர் அங்கிதாவை தாங்கள்தான் கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட்த்தக்கது.

Sorce:ndtv

PFI office raid and leaders arrested by NIA | Its part of larger conspiracy by BJP – Mohideen

உத்தரகாண்ட்: பெண்ணை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பாஜக தலைவரின் மகன் – வாட்ஸ் அப் உரையாடலில் அம்பலம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்