உத்தரகாண்ட் மாநிலம் பாவ்ரி மாவட்டத்தின் யம்கேஷ்வர் பிளாக்கில் ரிசார்ட் வைத்திருக்கும் பாஜக தலைவரின் மகன் உள்ளிட்ட இருவர் சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக காணாமல் போன 19 வயது சிறுமியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொலையான அப்பெண் பாஜக தலைவரின் மகன் வைத்துள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரித்வாரைச் சேர்ந்த பாஜக தலைவரும், உத்தரகாண்ட் மாட்டி கலா வாரியத்தின் முன்னாள் தலைவருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா ஆவார்.
வினோத் ஆர்யாவுக்கு மாநில அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது ஆனால் அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வகிக்கவில்லை.
ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, மேலாளர் சௌரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் காணாமல் போன சிறுமியைக் கொன்று, உடலை சீலா கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டதாக பவுரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகர் சந்திர சூயல் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தவறாக வழிநடத்த முயன்றனர். ஆனால் கடுமையாக விசாரித்தபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்று காவல்துறை உதவி கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
ஹரியானா: விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் தாமதம் – பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
கால்வாயில் சிறுமியின் உடலைத் தேட ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோட்வார் நீதிமன்றம் உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Source: newindianexpress
கேவலமான மனுசாஸ்திரத்த கொளுத்தக்கூடாதா? | Maruthaiyan Interview | A Rasa Controversial Speech Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.