உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கிக்கு அருகிலுள்ள தாதா ஜலால்பூர் கிராமத்தில் இன்று (ஏப்ரல் 27) நடைபெறவுள்ள தர்ம சன்சத் மாநாட்டை தடுத்து நிறுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தர்ம சன்சாத் மாநாடு வெறுப்பு பேச்சுக்கள் நிகழ்த்தப்படும் இடமாக மாறி விடக் கூடாது என உத்தரகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மாநில காவல்துறையினர் இந்நிகழ்வுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
“இந்த மாநாட்டில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டால், அதற்கு உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் தலைமைச் செயலாளரை நீதிமன்றத்திற்கு வரவழைப்போம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 33 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நடத்த அழைப்பு விடுத்த காளி சேனாவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தினேஷானந்த் பாரதியும் இதில் அடங்குவார்.
ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை
“எந்த வகையிலும் தர்ம சன்சாத் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படாது. அப்பகுதியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீற முயன்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல் ஆணையர் யோகேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாட்கள் நடைபெற்ற சர்ம சன்சாத் மாநாட்டில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு, இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்பும் விடுக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Source : newindianexpress
பந்து பொறுக்கி போடாதீங்க தமிழிசை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.