உத்தரபிரதேசம் அரசின் உத்தரவைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 6,000 க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் மத இடங்களில் இருந்து அகற்றப்பட்டன, மேலும் 30,000 ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட ஒலி வரம்புக்குள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றி, அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் ஒலிபெருக்கிகளை அமைக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது, 6,031 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் 29,674 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேரியுள்ளார். மக்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப தங்கள் மத நடைமுறைகளைச் செய்ய சுதந்திரம் இருப்பதாகக் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“மைக்ரோபோன்களை பயன்படுத்த முடியும் என்றாலும், எந்த வளாகத்திலிருந்தும் ஒலி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கக்கூடாது,” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
காவல்துறை வழங்கிய தகவலின்படி, வாரணாசி மண்டலத்தில் அதிகபட்சமாக 1,366 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து மீரட் (1,215), பரேலி (1,070) மற்றும் கான்பூர் (1,056) மாவட்டங்களில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் எந்தவித பாகுபாடுமின்றி ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு வருவதாக காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறினார்.
பந்து பொறுக்கி போடாதீங்க தமிழிசை I Makizhnan I Indra Kumar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.