உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறைக்குப் பின்னர் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்புகளில் புல்டோசர்களைச் சேர்த்தது சர்ச்சையாகி உள்ளது.
அலிகார் பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜமீர் உல்லா கான், ”யாருடைய சொத்துக்களையும் சேதப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது” என்று விமர்சித்துள்ளார்.
சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு
முகமது நபிக்கு எதிராக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்ததாகக் கூறப்பட்டது.
அனுமதி பெறாத கட்ட்டங்கள்தான் இடிக்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அக்னிபாத் திட்டத்துகு எதிராக போராட்டம் நடைபெற்ற இடங்களில் அலிகரும் ஒன்று. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய அணிவகுப்பில் புல்டோசர் இடம்பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இதை காவல்துறை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. ஆனால் புல்டோசர்கள் பயன் படுத்தப்பட்ட்தாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு
அலிகார் பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜமீர் உல்லா கான் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “எந்தவிதமான போராட்டத்தின்போதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. எதிர்ப்பை நசுக்க புல்டோசர்களைப் பயன்படுத்துவது முற்றிலும் நியாயமற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: Thewire
பாஜக ஆப்ரேஷன் தமிழ்நாட்டில் நடக்காது | Maharashtra political crisis | Surya Xavier
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.