Aran Sei

அரசு விழாவில் மாணவர்கள் குளிரில் நடுங்கியதாக வெளியான செய்தி – 3 ஊடகவியலாளர்கள் மீது வழக்குபதிவு செய்த உத்திரபிரதேச காவல்துறை

ரசு பள்ளிமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக 3 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள்மீது உத்திரபிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் மாணவர்கள், நிக்கர்கள் மற்றும் காட்டன் சட்டைகள் அணிந்து ஈடுபட்டதால் குளிரில் நடுங்கியாகச் செய்தி வெளியிட்ட உத்திரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹத் மாவட்டத்தைச் சேர்ந்த 3 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள்மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் – பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் பாஜக

உத்திரபிரதேச மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, கான்பூர் தேஹத் மாவட்டதின் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில், அம்மாநில தொழில்நுட்ப அமைச்சர் அஜித் சிங் பால், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட விழாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி சுனில் தத் அளித்த புகாரில் பெயரில், அக்பர்பூர் காவல்துரை வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி – 12 நாட்களில் 9 பேர் உயிரிழப்பு – ” வெளிப்படைத்தன்மை வேண்டும் “

உள்ளூர் தொலைக்காட்சியில் பணிபுரியும், மோஹித் காஷ்யப், அமித் சிங், யாசீன் அலி ஆகிய மூவரும் விழாவிற்கு நேரில் கூட வராமல், இப்படியான அடிப்படை ஆதாரமற்ற அறிக்கைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு இருப்பதாகவும், மாணவர்கள் குளிரில் நடுங்கும்போது அதிகாரிகள் பிஸியாக இருந்ததாக ஊடகவியலாளர்கள் திட்டி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி சுனில் தத், காவல்துறைக்கு அளித்த புகாரில், மாணவர்கள் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யவே தளர்வான ஆடைகள் அணிந்திருந்தாகவும், பின்னர் அவர்கள் சூடான ஆடையை மாற்றிக்கொண்டனர் எனக் கூறியிருப்பதாக, அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

’படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள்’ – மட்டக்களப்பில் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி

வழக்கை விசாரித்த கான்பூர் தேஹத் மாவட்ட நீதிபதி தினேஷ் சந்திர சிங், விழாவில் கலந்துகொள்ளாமல் ஊடகவியலாளர்கள்,  இது போன்ற தவறான தகவல்களைப் பரப்பியிருப்பது வேதனையளிப்பதாகவும், வழக்கில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக தி ஹிந்து கூறியுள்ளது.

அரசு விழாவில் மாணவர்கள் குளிரில் நடுங்கியதாக வெளியான செய்தி – 3 ஊடகவியலாளர்கள் மீது வழக்குபதிவு செய்த உத்திரபிரதேச காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்