Aran Sei

உ.பி: ஜெய் ஸ்ரீராம் என்று முழங்க கட்டாயப்படுத்தப்பட்ட இஸ்லாமிய துறவிகள் – தீவிரவாதிகள் எனக் கூறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

Credit: The Wire

த்தரபிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில், யாசகம் பெற்றுக் கொண்டிருந்த மூன்று இஸ்லாமிய ஃபகீர்கள் மீது அந்த பகுதி இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோண்டா பகுதியில் உள்ள தேகூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், “இவர்கள் சாதுக்களின் உடையை அணிகிறார்கள். ஆனால், இந்த பணத்தைக்  கொண்டு அவர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்கள்” என்று ஒருவர் பேசுவது பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை

மேலும், அந்த காணொளியில் ஆயுதங்களுடன் வரும் ஒரு கும்பல், ஃபகீர்களிடம் ஆதார் அட்டையைக் காண்பிக்குமாறு கோருகின்றனர். அதற்குத் ஃபகீர்கள் இல்லை என்று பதிலளித்ததைத் தொடர்ந்து அவர்களை தீவிரவாதிகள் எனக் கூறி அந்த கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர்.

”உங்கள் ஆதார் அட்டையைக் காட்டுங்கள், இல்லையென்றால் நாங்கள் உங்களைத் தாக்குவோம்… நீங்கள் அனைவரும் பயங்கரவாதிகள்… உங்கள் ஆதாரை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்லுங்கள்…” என்று கூறுகின்றனர்.

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்பூரில், மற்றொரு சம்பவத்தில் இஸ்லாமியர் ஒருவரை இந்து ஒருங்கிணைப்பு குழுவின் இளைஞரணித் தலைவர் துஷார் சுக்லா துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையோர கடை வைத்திருக்கும் இஸ்லாமியர் வியாபாரத்தில் ஈடுபட கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

சம்பவத்தில் ஈடுபட்ட துஷார் சுக்லாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முஹம்மது நபிகள்குறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்தற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுத்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Source: The Wire

படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஆபாச அண்டா Bayilvan Ranganathan | Nayanthara Vignesh Shivan Marriage

 

உ.பி: ஜெய் ஸ்ரீராம் என்று முழங்க கட்டாயப்படுத்தப்பட்ட இஸ்லாமிய துறவிகள் – தீவிரவாதிகள் எனக் கூறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்