Aran Sei

அமெரிக்கா நியூ ஜெர்சி: தொழிற்சங்கத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அமேசான் தொழிலாளர்கள்

மெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள அமேசான் தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கம் துவங்குவது குறித்த வாக்கெடுப்பை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்று அமெரிக்கத் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் இன்று(ஏப்ரல் 19) தெரிவித்துள்ளது.

அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தோல்வி – நிர்வாகத்தின் சூழ்ச்சி என்று வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

நியூ ஜெர்சியில் உள்ள பேயோன் அமேசான் டிப்போவில் உள்ள 200 தொழிலாளர்களில் குறைந்தது 60 பேர், லோக்கல் 713 இன்டர்நேஷனல் பிரதர்ஹுட் ஆஃப் டிரேட் யூனியனின் ஒரு பகுதியாக ஒருங்கிணைய விரும்பும் அட்டைகளைச் சமர்ப்பித்துள்ளனர் என்று அமெரிக்கத் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கத்தில் இணைவதற்கான தேர்தல் தேதி மற்றும் விதிமுறைகள் இன்னும் அமேசான் நிறுவனத்தால் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்களின் இக்கோரிக்கையை அமேசான் மறுக்கவும் கூடும்.

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தொழிற்சங்கங்களைத் துவங்கக் கூடாதென அமேசான் நிறுவனம் அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து தொழிற்சங்கங்களில் இணைய வேண்டும் என்ற விருப்பம் அமேசான் தொழிலாளர்களிடையே அதிகரித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு

கடந்த மாதம், ஸ்டேட்டன் தீவில் உள்ள JFK8 கிடங்கில் வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் அமேசான் லேபர் யூனியன் எனும் தொழிற்சங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். மேலும் இரண்டாவது ஸ்டேட்டன் தீவு கிடங்கில் உள்ள அமேசான் தொழிலாளர்கள் இந்த மாத இறுதியில் தொழிற்சங்கத்தில் இணையலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர்.

Source : The Hindu

அரண்செய் மீது பரப்பப்படும் அவதூறுக்கான பதில்

அமெரிக்கா நியூ ஜெர்சி: தொழிற்சங்கத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அமேசான் தொழிலாளர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்