Aran Sei

லடாக் வருவாய் துறை பணியிடங்களுக்கான தகுதிகளில் இருந்து உருது மொழி அறிவு நீக்கம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

டாக் வருவாய் துறை பணியிடங்களில் சேர உருது தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை லடாக் யூனியன் பிரதேச ஆளுநர் நீக்கியது கண்டனத்தை கிளப்பியுள்ளது.

லடாக் யூனியன் பிரதேச வருவாய் துறையில் உள்ள நைப்-தாசில்தார் மற்றும் பட்வாரி பதவிகளுக்கான ‘உருது மொழி அறிவு’ தகுதியை நீக்கி, லடாக் வருவாய் (துணை) சேவை ஆட்சேர்ப்பு விதி, 2021-ல் லடாக் துணைநிலை ஆர்.கே.மாத்தூர் திருத்தம் செய்துள்ளார்.

முன்னதாக, பட்டப்படிப்போடு, உருது மொழி அறிவும் கட்டாயமாக இருந்தது. லடாக்கின் கார்கில் மற்றும் லே ஆகிய இரு மாவட்டங்களிலும் உருது மொழி பேசப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அப்பிராந்தியத்தில் அரசியல் கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும், துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு: மாற்றாந்தாய் மனப்போக்கை பாஜக வெளிப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம்

உருது மொழிமீது பாரபட்சமான அணுகுமுறையை லடாக் நிர்வாகம் காட்டுவதாக வருவாய்த்துறை பிறப்பித்த உத்தரவுக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கார்கில் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் ஹாஜி ஹனீபா ஜான் கூறுகையில், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் உருது மொழியை பல்வேறு வழிகளில் வெளிப்படையாக எதிர்ப்பதோடு, வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பறிக்க முயல்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

உருது மொழியை அன்னிய மொழி என்று கூறிய பாஜகவைச் சேர்ந்த லடாக் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நாம்கியாலை விமர்சித்துள்ள அவர், “நாம்கியால் தனது வெறுப்பு அரசியலை தவிர்க்க வேண்டும். உருது மொழி பேசும் மக்களை மதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அரசாங்கத்தின் இத்தகைய தவறான நடவடிக்கையை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express, Op India

லடாக் வருவாய் துறை பணியிடங்களுக்கான தகுதிகளில் இருந்து உருது மொழி அறிவு நீக்கம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்