உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 2 ஆசிரியர்கள் தங்களது பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவிகளை மொட்டை மாடியில் பூட்டி வைத்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மாணவிகளை மீட்டக் காவல்துறையினர், பள்ளி விடுதிக்குப் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லக்கிம்பூர் கேரியின் கல்வி அதிகாரி லக்ஷ்மிகாந்த் பாண்டே, ”தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை எதிர்த்து இரண்டு ஆசிரியர்கள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அவர்கள்மீது தெரிவிக்கப்பட்டிருந்த புகார்கள் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கையாகதான் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இருவருக்கும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் அழுத்தம் தர இருவரும் இந்த மோசமான செயலில் ஈடுபட்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனோரமா மிஸ்ரா, கோல்டி கட்டியார் ஆகிய அந்த இரண்டு ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Source: The Hindu
சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான் – பேராசிரியர் ஜெயராமன் நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.