Aran Sei

புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவம் – தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை  தொடர்பான கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

தேசிய மக்கள் தொகை பதிவேடு 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நிலையில், அதில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்கான முதல்படி என பல்வேறு மாநில அரசுகள் மற்றும் குடிமை அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்தன.

”2021 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தின்போது, 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் புதுப்பிக்கப்பட்டும். 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட இருக்கும் என்பிஆர் அட்டவணை, இணைப்பு 10ல் கொடுக்கப்பட்டுள்ளது” என்று படிவம் கூறுகிறது. இருப்பினும் அரசு அதிகாரப்பூர்வமாக என்பிஆர் அட்டவணையை வெளியிடவில்லை.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை’- கி.வீரமணி

”தேசிய குடிமக்கள் பதிவேடு 2020” படிவத்தில் பதிலளிப்பவர்களின் தாய் மற்றும் தந்தை இந்தியாவில் பிறந்திருந்தால், அவர்கள் பிறந்த மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும், இந்தியாவில் பிறக்கவில்லை என்றால், பிறந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

நாட்டில் உள்ள 119 கோடி மக்களின் தரவுகளும் டிஜிட்டல் முறையில் என்பிஆரில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது முதல் முறையாக என்பிஆர் புதுப்பிக்கப்படவுள்ளது. தரவுகளை அணுக மொபைல் செயலி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தங்கள் விவரங்களை பார்த்துக் கொள்ள முடியும்.

‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டைப் புதுப்பிப்பது, அறிவிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் நடைமுறைப்படுத்தப்படாத குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) ஆகியவற்றுன் தொடர்புடையது என்பதால் பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Source : The Hindu 

 

புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவம் – தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்