நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமான மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) பதிவை இன்று (ஜனவரி 8) ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதுப்பித்ததுள்ளது.
அண்மையில், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் பதிவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. ஒன்றிய அரசின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் இந்த புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற வேண்டுமானால், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சான்று அல்லது அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.
மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி எஃப்சிஆர்ஏ-வின் கீழ் புதுப்பிக்கப்படாததைப் பற்றி இங்கிலாந்து பாராளுமன்றம் விவாதித்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனாலும், ஆக்ஸ்பாம் இந்தியா, ஐஐடி டெல்லி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ கூட்டமைப்பு, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் உட்படக் கிட்டத்தட்ட 6,000 நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழான பதிவு முடக்கப்பட்டுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.