Aran Sei

உ.பி.: கட்டாய மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாக விஎச்பி புகார் – 6 தலித் – கிறிஸ்தவ பெண்கள் கைது

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) புகார்களைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில், உத்தரபிரதேச மாநிலம் அசம்கரின் மஹராஜ்கஞ்ச் பகுதியில் 6 தலித்-கிறிஸ்தவ பெண்கள் மீது ஜூலை 30ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று இந்துத்துவா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர்கள், குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். .

விஎச்பியின் தொகுதித் தலைவர் அசுதோஷ் சிங்கின் புகாரை ஏற்று இந்திரா கலா, சுபகி தேவி, சாதனா, சவிதா, அனிதா, சுனிதா ஆகிய பெண்கள் – கலாவின் வீட்டில் அவரது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடும் போது கைது செய்யப்பட்டனர்.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

தி வயரிடம் பேசிய அசுதோஷ் சிங், பிறந்தநாள் விழா என்ற போர்வையில் கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இந்த விஷயத்தை காவல்துறைக்கு கொண்டு சென்றோம், அவர்கள் பெண்களை கைது செய்தனர்.

பெண்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்கள் மற்றவர்களை பணத்தின் மூலம் ஏமாற்றி, சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இயேசு சொன்னது போல் அவர்கள் கைகளை காற்றில் உயர்த்தினார்கள். அவர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மதம் மாற்ற முயன்றனர். மற்றொரு நிகழ்வு 12 கிலோமீட்டர் தொலைவில் நடந்தது, நாங்கள் அவர்களையும் முறியடித்தோம் என்று விஎச்பியின் தொகுதித் தலைவர் அசுதோஷ் சிங் தெரிவித்துள்ளார் .

சமூக-பொருளாதாரத்தில் ஏழ்மையாக உள்ள பெண்களையும் ஆண்களையும் வலுக்கட்டாயமாக மதமாற்ற பெண்கள் முயற்சிப்பதாக அசுதோஷ் சிங்கின் புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், விழாவை நிறுத்த முயன்றபோது மிரட்டல் விடுத்ததாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கில் பாஜக அமைச்சர் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம்

உத்தர பிரதேச மத மாற்ற தடைச் சட்டத்தின் அடிப்படையில், கட்டாய மதமாற்றத்திற்கு குறைந்தபட்சம் ரூ.15,000 அபராதத்துடன் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பட்டிய்ல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சிறார்கள் மற்றும் பெண்களை மதம் மாற்றினால் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள் சிறப்பு கீழை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் போது பெண்களுடன் சென்ற ஆர்வலர் தினநாத் ஜெய்ஸ்வர், “ஆறு தலித்-கிறிஸ்தவ பெண்கள் தொடர்ந்து சிறையில் வாடுகிறார்கள். மகேந்திர குமாரின் மகனின் பிறந்தநாள் விழா என்பதால் தெரிந்த நபர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கூடினர். அவர்கள் இயேசுவை நம்புகிறார்கள், அதனால் அவர்கள் கேக் வெட்டுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர். அமித் சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதால், பெண்களுக்கான சிறப்பு தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், இருப்பினும், பெண்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர்கள் கூறும்போது, இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தி வயரிடம் பேசிய பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனிஷ் சந்திரா, “கட்டாய மதமாற்றம் என்ற குற்றச்சாட்டின் கீழ், மக்களிடம் பிரபலமடைய வேண்டும் என்கிற காரணத்தால் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வலதுசாரி அமைப்புகளால் மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதே அடிப்படை உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார். .

“பெண்கள் தங்கள் வீட்டில் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். அவர்கள் பிரார்த்தனை செய்தபோது, ​​ பெண்கள் மீது விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் நன்பகல் 2 மணி அளவில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இருப்பினும், காவல்துறை குறிப்பில், பெண்கள் மாலை 6 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் பிணை பெற முயற்சித்தோம், ஆனால் பெண்களுக்கு பிணை வழங்க கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அரசியல் அழுத்தத்தின் காரணமாகத்தான் பெண்களுக்கு பிணை வழங்கப்படவில்லை என்று நாங்கள் உணர்கிறோம், ”என்று வழக்கறிஞர் முனிஷ் சந்திரா தெரிவித்துள்ளார்

2021 ஆம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 300 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

Source: thewire

Why RSS didn’t hoist National Flag for 50 years explained | Modi BJP | Independence day | Kanagaraj

உ.பி.: கட்டாய மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாக விஎச்பி புகார் – 6 தலித் – கிறிஸ்தவ பெண்கள் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்