Aran Sei

உ.பி: தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

த்தரபிரதேசத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பட்டியலின மாணவன் வீட்டிற்கு தாமதமாக வந்ததை ஒட்டி அவனின் தாய் ஏன் பள்ளி சீக்கிரமாக முடிந்தும் இவ்வளவு தாமதமாக வருகிறாய்?’ என விசாரித்திருக்கிறார். அப்போது பள்ளியில் இடைவேளையின் போது ஒரு ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக தாயிடம் சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய், காவல்துறையில் இது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். மேலும் ஆசிரியர் தனது மகனை தனியாக அறையில் அடைத்து வைத்ததாக தாய் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Source : timesnownews

கேஸ் சிலிண்டரில் மோடி படம் | பாஜகவை அலற விடும் சந்திரசேகர் ராவ் | Aransei Roast | BJP | MODI | KSR

உ.பி: தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்