Aran Sei

உ.பி: பட்டியல் சமூக சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் – நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை அதிகாரி உறுதி

த்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் ஏழு வயதேயான பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  மாணவனை தாக்கி சிறுவனின் தலையை தரையில் தேய்த்ததாக ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

கியோரௌனா பகுதியில் உள்ள கங்காபூர் தாலியா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  சிறுவன், பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது  ​​ஆசிரியர் அவனை அடித்து, தலையை தரையில் தேய்த்ததாக கொய்ராவுனா காவல் நிலைய அதிகாரி ஜெய் பிரகாஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

இதனால், மாணவரின் வலது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாணவியின் மாமா புகார் அளித்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜெய் பிரகாஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைக் கல்வி உதவி அலுவலர் ஃபர்ஹா ரைஸ் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து கல்வித் துறை கவனத்தில் எடுத்துள்ளது. இதுகுறித்து ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது  என்று தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ சேர்க்கை: அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்

இந்த விஷயத்தை தாமே விசாரித்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதாகவும் அடிப்படைக் கல்வி உதவி அலுவலர் ஃபர்ஹா ரைஸ் கூறியுள்ளார்.

Source: newindianexpress

kallakurichi sakthi school issue | selvi made scapegoat? | Nakkeeran prakash latest interview

உ.பி: பட்டியல் சமூக சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் – நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை அதிகாரி உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்