Aran Sei

உ.பி: தலித் எம்.பி., தொட்டால் தீட்டு பட்டுவிடும் என காலைத் தூக்கிய பூரி சங்கராச்சாரி

ட்டியல் சமூக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆசி பெறுவதற்காக பூரி சங்கராச்சாரியார் காலை வணங்கியபோது தன் மீது பட்டியல் சமூக உறுப்பினரின் கை மேல் பட்டுவிடுமோ என்று பூரி சங்கராச்சாரியார் தன்னுடைய காலை மேலே தூக்கியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எத்வா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ராம்சங்கர் கதேரியா. பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

பூரி சங்கராச்சாரியாரை ஒரு விழாவுக்காக ராம்சங்கர் கதேரியா அழைக்க சென்றுள்ளார். அப்போது சங்கராச்சாரியாருக்கு வணக்கம் வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அவரின் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றுள்ளார். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த சங்கராச்சாரியார், நாடாளுமன்ற உறுப்பினர் காலில் விழ வந்ததும் கால்களை தூக்கி விடுகிறார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. ராம்சங்கர் எம்.பியாக இருந்தாலும் அவர் பட்டியல் சமூகத்தை இருப்பதால் சங்கராச்சாரியார் தன் கால்களை தொட கூட அவரை அனுமதிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

இது குறித்து விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராம்சங்கர் “அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதையெல்லாம் தவறாகக் காட்டும் இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.” என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த புகைப்படம் உண்மையானது என பல்வேறு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

ஆதிசங்கரர் நிறுவிய 4 மடங்களில் ஒன்று பூரி சங்கரமடம். ஒரிசாவில் அமைந்துள்ள இந்த சங்கரமடத்தின் 145-வது தலைமை குருவாக சரஸ்வதி மஹாபாக் இருந்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு அழைக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

why Jeba Jeeva Priya of Kallakurichi Sakthi School wasn’t interrogated? Advocate Thamayanthi | Girl

உ.பி: தலித் எம்.பி., தொட்டால் தீட்டு பட்டுவிடும் என காலைத் தூக்கிய பூரி சங்கராச்சாரி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்