Aran Sei

உ.பி: வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை நடத்திய 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

த்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வீட்டில் தொழுகை நடத்தியதாக 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சாஜ்லெட் பகுதியில் உள்ள துல்ஹேபூர் கிராமத்தில் உள்ள இரண்டு கிராமவாசிகளின் வீட்டில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏராளமான மக்கள் கூடி பிரார்த்தனை செய்துள்ளனர். இவர்களின் அண்டை வீட்டில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உள்ளூர்வாசி ஒருவரின் புகாரின் பேரில், அடையாளம் காணப்பட்ட 16 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் என மொத்தமாக 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது, மத வழிபாடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து சில வலதுசாரி அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதன் தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source : NDTV

பாஜகவை நக்கல் பண்றிங்களா? | சன் டிவி செய்தியாளரால் கடுப்பான H. Raja | Aransei Roast | BJP | suntv

உ.பி: வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை நடத்திய 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்