Aran Sei

உ.பி. காவல்துறை அப்பாவிகளை கைது செய்கிறது – பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

த்தரபிரதேச காவல்துறை பல முறை அப்பாவிகளை கைது செய்து குற்றம் சாட்டுகிறது என்று உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் அண்டை மாநிலமான உத்தரகாண்ட மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, உத்தரபிரதேச மாநில காவல்துறைக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உ.பி: காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்த காவலருக்கு தண்டனையாக 600 கிமீ தொலைவில் இடமாற்றம்

கடந்த சில நாட்களுக்கு முன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தம் சிங் நகர் பகுதியில் ஜாபர் என்ற மணல் மாபியா பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரை கைது செய்ய உத்தரபிரதேச காவல்துறை அங்குள்ள கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையடுத்து, கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் உள்ளூர் பாஜக பிரமுகரின் மனைவி உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறையினர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பல காவல்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் – எம்.பி மௌவா மொய்த்ரா குற்றச்சாட்டு

இறுதியாக, உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாபர் கைது செய்யப்பட்டார். தவறான தகவலின் அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உ.பி காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது.

இது குறித்து உத்தரகாண்ட் மாநில உத்தம் சிங் நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், உத்தரபிரதேச காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி நேற்று (அக்டோபர் 17) செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “உத்தரபிரதேச காவல்துறை பல முறை அப்பாவிகளை கைது செய்து அவர்களை குற்றம் சாட்டுகிறது. ஒரு நிரபராதியை கைது செய்யும் நடவடிக்கை, மேலும் 99 குற்றவாளிகள் உருவாக வழிவகுக்கும்” என்று கூறினார்.

உ.பி.,யில் மாடு திருடிய வழக்கு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல்துறை விசாரணை – 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

இதற்கு பதிலடியாக, உத்தரகாண்ட் அதிகாரி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற கருத்துகளை அதிகாரத்துவத்தினர் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

லக்னோ கூடுதல் டிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறும்போது, ​​”உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளரின் கருத்தை நாங்கள் கேட்டுள்ளோம். எதுவுமே தெரியாமல் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது பொறுப்பற்ற செயல். இதுபோன்ற கருத்துகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்” என்றார்.

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

அதன் பின்னர், இது குறித்து விளக்கமளித்த உத்தரகாண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி கூறுகையில், “குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும், நிரபராதிகள் அல்ல.

அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் ஒரே நேரத்தில் பல குற்றங்களை விசாரிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Source : india today

வள்ளுவர் சங்கியா? கூகுள்ல தேடி பாருங்க | பூமர் அங்கிளாக மாறிய சங்கி கண்ணன் | Aransei Roast

உ.பி. காவல்துறை அப்பாவிகளை கைது செய்கிறது – பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்