உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் “ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை” தெரிவித்தததாக கூறி, 19 வயது இஸ்லாமிய இளைஞரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அக்ரம் அலி ஜூன் 12 ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக “ஆதித்யநாத்திற்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்தை” பதிவேற்றியதாகவும், அது வைரலானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்ரம் அலி மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஒருவரை அவமதித்தல்), 505 (வர்க்கங்களிடையே பகைமை, வெறுப்பு அல்லது தீய எண்ணத்தை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல்), 469 (நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்) மற்றும் 295 (எந்தவொரு மதத்தையும் அவமதிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தாண்டு மே மாதம், உத்தரப்பிரதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு 15 வயது சிறுவன் ஒரு பசு காப்பகத்தில் 15 நாட்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Source : the wire
Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.