Aran Sei

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

credits : PTI

த்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்துப் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. எங்கும் வன்முறை நடக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மற்றும் ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சாலையில் தொழுகை நடத்தப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு ஒரு கலவரம் கூட நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள்; நாங்கள் இந்தியத் தாய்க்கு உயிரைக் கொடுப்போம்’ – சர்ச்சையான யோகி ஆதித்யநாத்தின் ட்விட்

“மேலும் எங்கள் அரசு மாநிலத்தில் உள்ள சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடியுள்ளது. மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கோசாலைகளை கட்டியுள்ளோம். மத வழிபாட்டுத் தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகளையும் அகற்றியுள்ளோம். எங்கள் அரசாங்கம் 700 க்கும் மேற்பட்ட மத இடங்களை புனரமைத்துள்ளது” என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Source : The Print

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்