பிப்பிரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்ட சச்சின் பண்டிட் மற்றும் ஷுபம் ஆகிய இருவருக்கும், அவர்களது குடும்பத்துக்கு ஆதரவளிப்பதாக உத்தர பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுனில் பரலா தெரிவித்துள்ளார்.
இதில் சச்சின் பண்டிட் என்பவர் பாஜக உறுப்பினர் என்பதை அவரது ‘தேஷ்பக்த் சச்சின் இந்து’ என்ற பேஸ்புக் கணக்குக் காட்டிக்கொடுத்துள்ளதாகவும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்களுடன் அவர் நெருக்கமாக எடுத்துள்ள பல்வேறு புகைப்படங்கள் பேஸ்புக் இல் இருந்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சச்சின் பண்டிட் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இந்த வழக்கில் “தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், நியாயமான விசாரணைக்குப் பிறகு உண்மை தெளிவாகிவிடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.