உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் மதரஸாக்களில் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு முடிவெடுத்த நிலையில், அங்கீகரிக்கப்படாத பிற கல்வி நிறுவனங்களில் ஏன் கணக்கெடுக்கப்படவில்லை என்று ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
மதவெறி சக்திகளால் மதரஸாக்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டிய ஜமியத் தலைவர் மௌலானா அர்ஷாத் மதனி, சமூகத்தில் நிலவும் மதவெறி மனப்பான்மை காரணமாக இஸ்லாமியர்களின் மனதில் அச்சம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
கடந்த சில ஆண்டுகளாக மதவெறி சக்திகள் நாடு முழுவதும் வெறுப்பு சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. மதரஸாக்கள் தேசத்தின் கழுத்து நரம்புகள். அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையில் மத நிறுவனங்களை நடத்த நாங்கள் எப்போதும் முயற்சித்தோம், ஆனால் மதவெறி சக்திகள் அவற்றை அழிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியச் சிறைகளில் உள்ள கைதிகளில் 30% பேர் இஸ்லாமியர்கள் – தேசிய குற்ற ஆவண காப்பம் தகவல்
மதரஸாக்கள் இருப்பது நாட்டிற்கு எதிரானது அல்ல, அதன் வளர்ச்சிக்காகவே உள்ளது என்றும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷாத் மதனி குறிப்பிட்டுள்ளார்.
Source: newindianexpress
Why Journalist Savithri Kannan was arrested ? Kallakurichi Case Latest update | Karthik Pillai K Tv
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.