உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்து முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை பிரயாக்ராஜ் மற்றும் சஹரன்பூர் மாவட்ட நிர்வாகம், புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கியது.
சட்டத்தின் விதிகளை மீறி வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் மாவட்ட மோதல்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஜாவேத்தின் வீடு நேற்று இடிக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான இவரின் மகள் அஃப்ரீன் பாத்திமா, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளராகவும் உள்ளார்.
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜாவேத்தின் வீட்டிற்கு வந்த அலகாபாத் காவல்துறையினர் வீடு இடிப்பதற்கான நோட்டீசை ஒட்டியுள்ளனர். ஜாவேத்தின் பெயரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடு அவரது மனைவியின் பெயரில் உள்ளது. வீடு அமைந்திருக்கும் நிலம், அவர்களின் பூர்வீக சொத்து. இதில் ஜாவேத்திற்கு சட்டப்பூர்வ பங்கு எதுவும் இல்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜாவேத்தின் வழக்கறிஞர் கே.கே. ராய், “சனிக்கிழமை இரவு ஜாவேத் பெயரில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஞாயிற்கிழமை ஜாவேத்தின் மனைவியின் பெயரில் இருக்கும் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டப்படி மனைவியின் சொத்தில் கணவருக்கு பங்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Source : india today
Bulldozer இருக்க நீதிமன்றம் எதற்கு? | உ.பி.,-இல் பாஜக வெறியாட்டம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.