Aran Sei

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கு – பாஜக அமைச்சருக்கு ஓராண்டு சிறை

த்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட்தால் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக அமைச்சருக்கு  ஓராண்டு சிறை தண்டைனை வழங்கி கான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசில் குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் பதவி வகிக்கிறார். கடந்த1991-ம் ஆண்டில் அவரது வீட்டில் இருந்து உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 31 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

இந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்த கான்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், அமைச்சர் ராகேஷ் சச்சனை குற்றவாளியாக அறிவித்தார். அப்போது வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்களுடன் அமைச்சர் தலைமறைவானதாக புகார் எழுந்தது.

இந்த சூழலில் கான்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராகேஷ் சச்சன் நேற்று ஆஜரானார். உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் இருந்து சென்றதாக அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் தண்டனை விவரத்தை அறிவித்துள்ளார். அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறையும் ரூ.1,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

உ.பி.: கட்டாய மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாக விஎச்பி புகார் – 6 தலித் – கிறிஸ்தவ பெண்கள் கைது

அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ரூ.50,000 பிணையில் அவருக்கு பிணை வழங்கியுள்ளார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அமைச்சர் ராகேஷ் சச்சன் தெரிவித்துள்ளார்.

Rajinikanth meeting with governor RN Ravi | bjp | tamilaruvi maniyan | annamalai | admk

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கு – பாஜக அமைச்சருக்கு ஓராண்டு சிறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்