உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தை சேர்ந்த இரு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய மாவட்ட நீதிமன்றத்திற்குச் சென்ற பொழுது இந்து யுவ வாகினி என்ற இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர் அவர்களை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
இந்நிலையில் திருமணம் செய்யவிருந்த ஆணின் மீது உத்தரப் பிரதேசத்தத்தின் மதமாற்றத் தடை சட்டத்தின் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
லூதியானாவிலிருந்து அந்தப் பெண்ணைக் கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு
மொராதாபாத்தைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி ஏப்ரல் 14 அன்று வீட்டை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த காதல் ஜோடி ஏப்ரல் 18 அன்று தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால் இந்து யுவ வாகினி அமைப்பினரால் அவர்கள் தடுக்கப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த திருமணத்தை லவ் ஜிகாத் என்று குற்றம் சாட்டியதோடு, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்தை எழுப்பியபடி இந்த ஜோடியை காவல்துறையினரிடம் இந்து யுவ வாகினி அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
Source : The Wire
ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய விவகாரம் – மருத்துவர் ஜெயராமன் விளக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.