கியான்வாபி மசூதியில் வழிபாடு நடத்த கோரிய இந்துப் பெண்கள் 5 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி உரிமையியல் நீதிமன்றம் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் , கியான்வாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
கடந்த மே மாதம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான கியான்வாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால், கியான்வாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது.
உ.பி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சமூக சிறுமி – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், கியான்வாபிமசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கியான்வாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கை வாரணாசி உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து அனுபவம் பெற்ற நீதிபதி உள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கியான்வாபிமசூதியின் சுவரில் உள்ள இந்து மத கடவுள் சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை வாரணாசி மாவட்ட உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் கியான்வாபி மசூதிவழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், கியான்வாபி மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்த கோரிய இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Queen Elizabeth | ஆண்ட பரம்பரை கதை: மக்களை ஏமாற்றும் மோசடி I Kamaraj Interview I England | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.