உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் தலித் சிறுமி ஒருவரை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 வயது சிறுமி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் சிறுமியை கற்பழித்து பின்னர் டீசலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் செப்டம்பர் 7 ஆம் தேதி மாவட்டத்தின் மாதவ் தாண்டா பகுதியில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது., பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்கும் காணொளி ஒன்று சனிக்கிழமை பரவிய போது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செய்தியாளர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு கூறியதாவது: தீக்காயங்களுடன் சிறுமி செப்டம்பர் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் குடும்பத்தினரின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டம் மற்றும் பட்டியல் சாதிகள்/பழங்குடியினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு கூறியுள்ளார்.
மாவட்ட நீதிபதி யோகேஷ் குமார் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Source: indiatoday
Kallakurichi Sakthi School is behind Karthik Pillai – Balabharathi | Kallakurichi Case Latest Update
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.