Aran Sei

உ.பி.: இந்த உணவை விலங்குகள் கூட உண்ணாது – தரமற்ற உணவால் கண்ணீர் விடும் காவலர்

த்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் காவலர் ஒருவர் (Police Constable ),காவல்துறைக்கான உணவகத்தில் வழங்கப்படும் உணவை விலங்குகள் கூட உண்ணாது என்று கூறி சாலையில் நின்று கதறி அழுதுள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில் காவலர் மனோஜ் குமார் என்பவர் ரோட்டிகள், பருப்பு மற்றும் அரிசியுடன் சாலையில் அழுதுகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் மூத்த அதிகாரி ஒருவர் அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

வழிப்போக்கர்களால் சூழப்பட்ட மனோஜ் குமார், உணவு குறித்து மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

என்னை பணியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர் என்று காவலர் மனோஜ் கூறியுள்ளார்.

நாகபட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

“காவல்துறை அதிகாரிகளுக்கு சத்தான உணவுக்கான உதவித் தொகையை மாநில அரசு வழங்குவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்பே அறிவித்திருந்தார். ஆனால், நீண்ட நேரப் பணிக்குப் பிறகு இதுதான் எங்களுக்குக் கிடைக்கிறது,”  என்று காவலர் தெரிவித்துள்ளார்.

சரியான உணவு இல்லையென்றால் காவலர்கள்  எப்படி வேலை செய்வார்கள்?” என்று காவலர்  மனோஜ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: ndtv

TN Police Acts in the favour of Kallakurichi Sakthi international School Ravi | Adv Milton interview

உ.பி.: இந்த உணவை விலங்குகள் கூட உண்ணாது – தரமற்ற உணவால் கண்ணீர் விடும் காவலர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்