Aran Sei

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

த்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இன்று(பிப்பிரவரி 10), மேற்கு உத்தரப் பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் நரேஷ் திகாயத், “நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள். விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களியுங்கள். நான் எனது குடும்பத்துடன் மதியம் இரண்டு மணிக்கு சிசௌலியில் வாக்களிப்பேன். நீங்களும் ஜனநாயகத்தின் மகாயாகத்தில் இணையுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உ.பி. தேர்தல்:  என் மகனை பாஜக வேட்பாளராக நிறுத்தினால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் – ரீடா பகுணா ஜோஷி

அவரது இளைய சகோதரர் ராகேஷ் திகாயிட்டும் இதேபோன்ற ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

பாரதிய கிசான் யூனியனின் தலைமையகமாக திகழும் சிசௌலி மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது.

பாரதிய கிசான் யூனியனானது, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவில் உள்ள ஒரு பலமான விவசாயிகள் சங்கமாகும். பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத், விவசாயிகளின் போராட்டத்தின் முக்கிய முகங்களில் ஒன்றாக திகழ்ந்தார்.

விவசாய சட்டங்கள், விவசாயிகள் போரட்டங்கள் குறித்து நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களையும், மகாபஞ்சாயத்து கூட்டங்களையும் நடத்தினார்.

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை இழந்ததாக கூறப்படும் விவசாயிகளின் போராட்டமானது மேற்கு உத்தரபிரதேசத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களியுங்கள்” என்ற திகாயத் சகோதரர்களின் அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச விவசாயிகளுக்குப் போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அண்மையில் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்