Aran Sei

உ.பி., தேர்தல்: யோகி ஆதித்யநாத்தை வெல்ல தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்த சந்திரசேகர் ஆசாத்

கோரக்பூர் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் சந்திரசேகர் ஆசாத் வெற்றி பெறுவதற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்தியாரி பாக் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் துவங்கினார். கோரக்பூர் தொகுதிக்கு ஆறாம் கட்டமாக மார்ச் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

யோகி ஆதியநாத்தை உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பேன் : சந்திர சேகர் ஆசாத் சூளுரை

“கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு கேட்டுப் போராடிய இளைஞர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என யோகி ஆதித்யநாத் பதில் சொல்ல வேண்டும். 1998 முதல் 2014 வரை கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தால் எந்த வளர்ச்சியையும் கொண்டு வர முடியவில்லை. இந்த நிலைமையில்தான் அவர் மீண்டும் எனக்கே வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்கிறார்” என்று சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார்.

“வேலையற்றோர், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மக்களோடு, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் போராடுவேன்” என்று ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

உ.பி., தேர்தல்: யோகி ஆதித்யநாத்தை வெல்ல தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்த சந்திரசேகர் ஆசாத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்