உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திர பிரதாப் சிங், தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பிப். 10 தேதி முகநூல் நேரலையில் பேசிய ராகவேந்திர பிரதாப் சிங், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றதில் இருந்து, இஸ்லாமியர்கள் குல்லா அணிவதை நிறுத்திவிட்டனர். என்னை மீண்டும் வெற்றி பெற வைத்தால், அவர்கள் நெற்றியில் திலமிட்டுக் கொள்வார்கள்” என பேசியுள்ளார்.
அதே காணொளியில், அங்குக் கூடியிருந்த ஆதரவாளர்களிடம், ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் இருக்குமா அல்லது அலைக்கும் சலாம் முழக்கம் இருக்குமா? என கேள்வி எழுப்ப அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.
மதுரை: ஹிஜாபுக்கு எதிப்பு தெரிவித்த பாஜக பூத் ஏஜெண்ட் – பூத் ஏஜெண்ட்டை வெளியேற்றிய பொதுமக்கள்
மேலும், ”காவிக் கட்சிக்கு ஆதரவளிப்பேன் என துர்கா தேவி மீது ஆணையிட்டு சொல்லுங்கள். துர்கா தேவி நம்முடன் உள்ளார். அவரின் முன்பாக அனைவரும் சத்தியமிடுங்கள்” என பேசியுள்ளார்.
மசூதிகளில் ஒலிக்கப்படும் ஆசான் (பிரார்த்தனைக்கான அழைப்பு ஒலி) ஒலியைக் கேட்டும் மற்றொரு காணொளியில், “(ஆபாச வார்த்தையில் இஸ்லாமியர்களை குறிப்பிட்டு, இஸ்லாமியர்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் ஒலிப்பெருக்கி வைக்க அனுமதி பெற்றுள்ளீர்களா இல்லையா என்று சோதனை செய்வேன். அனுமதி இல்லை என்றால் ஒலிப்பெருக்கியை மசூதியில் இருந்து அகற்றி விடுவேன்.” என பேசியுள்ளார்.
மேலும், “முன்னதாக ரமலான் மாதத்தில், துமாரிகஞ்ச் பகுதியின் சாலைகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். நாமும் அதை பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது அல்லவா?. எதிர்காலத்தில் காவி அரசுக்கு ஆதரவளித்து, மோடிக்கு வலிமை சேருங்கள்” என கூறியுள்ளார்.
அதே காணொளியில், “கொரோனா பெருந்தொற்றின்போது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ரேஷன் பொருட்கள் வழங்கினோம். உப்பு வழங்கினோம். நம்மிடம் உப்பைப் பெற்றுக் கொண்டு நமக்கே துரோகிகளாக மாறுகின்றனர். அவர்களை சும்மா விட முடியாது. இந்து விரோதிகள் தான் மிகப்பெரிய பிரச்னை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திர பிரதாப் சிங் பேசியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.