பிப்ரவரி 20 அன்று கர்நாடகாவின் ஷிவமொக்காவில் ஹர்ஷா என்ற பஜ்ரங் தள் உறுப்பினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கல் வீச்சு மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை அடுத்து, பிப்பிரவரி 21, 22 தேதிகளில் ஷிவமொக்கா மற்றும் பத்ராவதி நகரங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144 – ன் படி, மக்கள் நடமாடத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஜ்ரங் தள் உறுப்பினரின் கொலை பற்றிய செய்தி பரவியதையடுத்து, ஷிவமொக்காவின் சில இடங்களில் கல் வீச்சு மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆகவே பதற்றமான பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
“ஹர்ஷா ஒரு இந்துத்துவ சிந்தனையாளர், ஆர்எஸ்எஸ் இன் தன்னார்வ தொண்டு பணி செய்து வருபவர். ஷிவமொக்கா மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவர்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஹர்ஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவி கொடிகளை ஏந்தியவாறும், ஹர்ஷாவை புகழ்ந்து முழக்கமிட்டமாறும் அவரது உடலை எடுத்துச் சென்ற வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தனர்.
வாகனத்தில் ஹர்ஷாவின் அஸ்தியைக் கொண்டு சென்ற பாதையில் கற்கள் வீசப்பட்டதால், . சில கடைகள் உட்பட ஒன்றிரண்டு வாகனங்கள் சேதமடைந்தன
ஷிவமொக்கா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குப் பிப்ரவரி 21-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட துணை ஆணையர் செல்வமணி தெரிவித்துள்ளார். பத்ராவதி நகரில் உள்ள பள்ளிகளுக்கு 10ம் வகுப்புவரை விடுமுறை என அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
ஷிவமொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிக் காவிக் கொடி ஏற்றியதாகவும், குஜராத்தின் சூரத்தில் இருந்து காவி துண்டுகள் கொண்டு வரப்பட்ட லாரிகள் குறித்த தகவல் தன்னிடம் இருப்பதாகக் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்திருந்தார்.
பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரின் பேச்சுக்கள் தான் இத்தகைய வன்முறைக்குக் காரணம் என்றும், ஹர்ஷாவின் கொலைக்கு இஸ்லாமியக் குண்டர்கள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈஸ்வரப்பா மீது கர்நாடக அரசு வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். காவிக் கொடி தொடர்பான கருத்துக்களுக்கும், இந்த கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறியுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.