Aran Sei

வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை; கலவரத்துடன் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில்

த்தரபிரதேசத்தில் நடைபெற்ற வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும் கலவரக்காரர்களுக்கு எதிராக தனிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு கோரியுள்ளது.

சட்டவிரோத கட்டங்களுக்கு எதிரான வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான முறையான அறிவிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டன என்று உ.பி அரசு தெரிவித்துள்ளது.

‘உ.பி. புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்தை அலட்சியம் செய்கிறது’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

மேலும், மனுதாரர் கட்டட இடிப்புகளை கலவரங்களுடன் தவறாக இணைக்கிறார் என்று அரசு கூறியுள்ளது.

சட்டத்தால் நிறுவப்பட்ட நடவடிக்கைகளின்படி, உள்ளூர் மேம்பாடு அதிகாரிகளால் சட்டப்பூர்வ நடவடிக்கையாக வீடுகள் இடிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது” என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜாவேத் முகமதுவின் வீடு இடிப்பு அவருக்குப் போதுமான அவகாசம் வழங்கப்பட்ட பிறகே நடைபெற்றது, அதற்கும் பிரக்யாராஜ் கலவரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வீடு இடிப்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்று உத்தரபிரதேச அரசு குறிப்பிட்டுள்ளது.

உத்தர பிரதேசம்: புல்டோசர்களுடன் கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்

இஸ்லாமிய அமைப்பான ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்த மனுவை ஜூன் 16 தேதி, விசாரித்த உச்சநீதிமன்றம், வீடு இடிப்பு நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது என்று தெரிவித்திருந்தது.

மேலும், வீடுகள் இடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்குறித்து பதிலளிக்க உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பாதிக்கப்பட்ட யாரும் நீதிமன்றத்திகு செல்லவில்லை. அவ்வாறு அணுகுவதாக இருந்தாலும் முதலில் உயர்நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று உத்தரபிரதேச அரசு வாதிட்டது.

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

கான்பூர் இடிப்புகள் குறித்து குறிப்பிட்ட உத்தரபிரதேச அரசு, கட்டடங்கள் சட்டவிரோதமானவை என்று இரண்டு கட்டுமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. கலவரத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நகர்புற திட்டமிடல் சட்டத்தின் கீழ் முன்பே நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று அரசு தெரிவித்துள்ளது.

”சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒரு தவறான நிறத்தைத் கொடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் முயற்சித்துள்ளது. ஒரு சில சம்பவங்களை ஒரு தலைபட்சமாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசுக்கு எதிராக பரந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.” என்று உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது.

உ.பி. புல்டோசர் நடவடிக்கை சட்டத்தை கேலிக்கூத்தாக்குகிறது – உச்ச நீதிமன்றம் தலையிட முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தல்

உத்தரபிரதேச  நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1972-ன் படி, அங்கீகரிக்கப்படாத / சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வழக்கமான முயற்சியின் ஒரு பகுதியாக, மாநில நிர்வாகத்திலிருந்து சுயாதீனமான, சட்டப்பூர்வமான தன்னாட்சி அமைப்புகளான உள்ளாட்சி மேம்பாட்டு ஆணையங்களால் இடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), உத்தரபிரதேச குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1986, பொதுச் சொத்துக்கள் சேதங்கள் தடுப்புச் சட்டம், உத்தரபிரதேசம் பொது மற்றும் தனியார் சொத்து சேதங்களை வசூலிப்பதற்கான சட்டம், 2020 மற்றும் விதிகள் 2021 போன்ற முற்றிலும் மாறுபட்ட சட்டங்களின் படி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பிரச்னை செய்பவர்கள் மீது புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் – உ.பி. துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக்

கான்பூர் மற்றும் பிரயாக்ராஜில் மாநில நிர்வாகத்தால் சட்டவிரோதமாக கருதப்பட்ட கட்டிடங்களை சமீபத்தில் இடித்தது தொடர்பாக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற முஸ்லீம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை; கலவரத்துடன் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்