உத்தரபிரதேசத்தில் “பட்டியல் சமூகத்தில் இருந்து யாரவது ஒருவர் எனது வயலுக்குள் நுழைந்தால் அவர்களை 50 முறை செருப்பால் அடிப்பேன். மேலும் ரூ. 5,000 அபராதம் கட்ட வேண்டும்” என்று மிரட்டல் விடுத்த முன்னாள் கிராம தலைவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பாவ்டி குர்த் கிராமத்தில் உள்ள பட்டியல் சமூக மக்களின் வீடுகளுக்கு முன்பு மேளம் தட்டி இந்த அறிவிப்பை வெளியிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
முன்னாள் கிராம தலைவரான ராஜ்பீர் தியாகி குன்வெர்பால் வயலில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்ய மறுத்ததை அடுத்து இந்த மிரட்டலை அவர் விடுத்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ராஜ்பீர் தியாகியை கைது செய்த காவல்துறை அவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source : indianexpress
இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.