Aran Sei

உ.பி: ‘கலவரத்தில் ஈடுபட்டதற்கான பரிசு’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பாஜக எம்.எல்.ஏ

உத்தரபிரதேச மாநிலத்தில், காவல் நிலையம் ஒன்றில் இஸ்லாமியர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் ஒரு காணொளியை அம்மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷலாப் மணி திரிபாதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த ‘கலவரத்தில் ஈடுபட்டதற்கான பரிசு’ என்று அவர் எழுதியிருந்தார். இது உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நபிகள் நாயகத்தை பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா அவமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதசத்தின் பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்பொழுது கலவரத்தில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக பலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷலாப் மணி பகிர்ந்த காணொளி வைரலானது.

உ.பி. புல்டோசர் நடவடிக்கை சட்டத்தை கேலிக்கூத்தாக்குகிறது – உச்ச நீதிமன்றம் தலையிட முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தல்

ஆனால் இந்த காணொளிபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இது சம்பந்தமாக எந்த புகாரும் வரவில்லை என்று ஷரன்பூர் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த காணொளியில் உள்ள 5 பேரும் சஹரன்பூரை சேர்ந்தவர்கள் என்றும், அந்த ஐவரும் கடுமையாக காயமடைந்துள்ளதாக என்டிடிவி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த காணொளியில் உள்ள இஸ்லாமிய இளைஞரான முகமது அலி என்பவற்றின் தாய் அஸ்மா காவல்துறையினர் அடிக்கும் காணொளியைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஏனெனில் முகமது அலியின் கைகள் காவல்துறையினர் அடித்ததால் வீங்கியுள்ளன என்று அஸ்மா கூறியதாக என்டிடிவி  தெரிவித்துள்ளது.

அந்த காணொளியில் வெள்ளை குர்தா அணிந்து மூலையில் நிற்கும் மற்றொரு நபர் சஹாரன்பூரைச் சேர்ந்த முகமது சைஃப் ஆவார். நாங்கள் அவரது வீட்டை அடைந்தபோது, சைஃப் உள்ளூர் காவல்துறையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதாகவும், அதனால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை என்றும் அவரது சகோதரி ஸெபா கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

உ.பி: யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 19 வயது இஸ்லாமிய இளைஞர் கைது

இதே போல் மற்ற மூவரான முகமது சைஃப், ராஹத் அலி மற்றும் இம்ரான் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என்று என்டிடிவி  தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் காவல்துறையை சந்திக்கவோ, புகார் கொடுக்கவோ மிகவும் பயப்படுவதாக என்டிடிவி  தெரிவித்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் எட்டு காவல்நிலைய மரணங்கள் மற்றும் 443 நீதிமன்றக் காவல் மரணங்களுடன், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான காவல் மரணங்களுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : ndtv

ஷமூக ஆர்வலர்களுக்கு இன்னுமா பத்தல | Rajiv Gandhi Interview

உ.பி: ‘கலவரத்தில் ஈடுபட்டதற்கான பரிசு’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பாஜக எம்.எல்.ஏ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்