சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்ய நாத் அமைச்சரவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டில் ராகேஷ்சச்சன் வீட்டில் இருந்து உரிமம்பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதுதொடர் பாக கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குவிசாரணை நடைபெற்று வந்தது.
நாடாளுமன்றம் செயலிழந்துவிட்டது; ஜனநாயகம் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது – ப.சிதம்பரம் விமர்சனம்
இந்த வழக்கில் கான்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், அமைச்சர் ராகேஷ் சச்சன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக் கான தண்டனை விவரம் விரை வில் வெளியிடப்பட உள்ளது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடன் அமைச்சர் ராகேஷ் சச்சன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப் படுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
ராகேஷ் சச்சன் முதலில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தார். கடந்த 2022-ல் பாஜகவில் இணைந்து எம்எல்ஏ.வானார். தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் செய்த தரமான சம்பவங்கள் I Kalaignar Karunanidhi I Kamaraj interview | National Flag | Stalin
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.