Aran Sei

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

பாஜக தலைவரும் உத்தரபிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கோபமடைந்து, நேர்காணலை பாதியிலேயே நிறுத்தி, நிருபரின் முகமூடியைப் பறித்ததோடு, தொலைக்காட்சி குழுவினரை கட்டாயப்படுத்தி காட்சிகளை நீக்கியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

பின்னர், “இது ஒரு கெடுவாய்ப்பான சம்பவம்” என்று அவர் கூறியதாக, பிபிசி குறிப்பிட்டுள்ளது.

நேர்காணல் செய்பவர் கேசவ் பிரசாத் மௌரியாவிடம், சிறுபான்மையினர்மீது வெறுப்பு பரப்பப்பட்ட ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்தும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் வெறுப்பு பேச்சுகள் குறித்து மௌனமாக இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு

அதற்குப் பதிலிளித்துள்ள கேசவ் பிரசாத் மௌரியா, “நாங்கள் எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ‘அனைவரின் வளர்ச்சியும் ஆதரவையும்’ நம்புகிறோம். அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்த மதத் தலைவர்களுக்கு உரிமை உண்டு. இந்து மத தலைவர்களை மட்டும் ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். மற்ற மத தலைவர்கள் கூறிய கருத்துகளை ஏன் கவனத்தில் கொள்வதில்லை?” என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

“370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு எத்தனை பேர் ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது? அதை பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை. தர்ம சன்சத் என்பது பாஜக நிகழ்ச்சி அல்ல. அது மதத் தலைவர்களின் நிகழ்ச்சி. சாமியார்கள் தாங்கள் நம்புவதைச் சொல்லலாம். இது அரசியலுடன் தொடர்புப்படுத்தப்பட வேண்டியது அல்ல. மேலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தலைவர்களும் உள்ளனர். அவர்களைப் பற்றியும் பேசுங்கள்” என்றும் துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்

தர்ம சன்சத் நிகழ்ச்சியின் பேச்சுக்கள் தேர்தலுக்கு முந்தைய சூழலை சீர்குலைப்பதால், இது அரசியலுக்கு தொடர்பில்லாத ஒன்றாக கருத முடியாது என்று பேட்டியாளர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் எழுப்பப்பட்ட முழுக்கங்கள் தொடர்பாகவும் சிலர்மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“தேசத்துரோகம் என்பது வேறு. ஆனால், இது ஒரு தர்ம சன்சத் நிகழ்ச்சி. அப்படியானால், சூரிய நமஸ்காரத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அகில இந்திய இஸ்லாமியர்கள் சட்ட வாரியத்திற்கு உரிமை இல்லை என்று நாம் கூறலாம்” என்று கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்துள்ளார்.

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியபோது, “நீங்கள் எந்த காணொளியைப் பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் தேர்தல் பற்றி கேட்கிறீர்களா? நீங்கள் ஒரு பத்திரிகையாளர் போல் பேசவில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவின் ஏஜென்ட்டைப் போல பேசுகிறீர்கள். நான் உங்களிடம் பேச மாட்டேன்” என்று அவர் கூறி, நேர்காணலை பாதியிலேயே நிறுத்தி, தனது மைக்கை கழற்றியுள்ளார்.

Source: BBC, NDTV

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்