Aran Sei

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

க்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரதிய கிசான் யூனியனின் லக்கிம்பூர்கேரி மாவட்ட தலைவரான தில்பாக் சிங் நேற்று (மே 31) தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால் அந்த தாக்குதலில் அவர் காயமடையவில்லை.

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தில்பாக் சிங் முக்கிய சாட்சியாவர். இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய தில்பாக் சிங், “அடையாளம் தெரியாத நபர்கள் எனது காரின் டயரை பஞ்சர் செய்துள்ளனர். பிறகு எனது காரின் கதவை அவர்கள் திறக்க முயன்றனர். கதவை திறக்க முடியவில்லை என்றபோது காரின் கண்ணாடியை பார்த்து 2 முறை சுட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

நாக்க அடக்கி பேசுங்க Annamalai Journalist Protest Against Annamalai

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்