Aran Sei

உ.பி: வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர் – வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக காவல்துறை மீது பெண்ணின் தந்தை புகார்

த்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் வரதட்சணை கேட்டுத் தனது மனைவியின் விரலை வெட்டியுள்ளார். இந்தத் தம்பதியினருக்கு 5 வயதில் குழந்தையுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து வரதட்சணை கேட்டுத் தன்னை ராணுவ வீரர் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி புகாரளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் சுதேஷ் பால் சிங். இவர் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தனது மகளான பூஜா தோமரை கடந்த 2014-ம் ஆண்டு மீரட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் அங்குள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமான நாளில் இருந்தே வரதட்சணை கேட்டுத் தனது மனைவி பூஜாவை ராணுவ வீரர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தன்னை பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் – பிரபல பாடகி சுசித்ரா காவல்நிலையத்தில் புகார்

திருமணத்துக்கு முன்பாக 60 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள், ஒரு கார், 3 ஏக்கர் நிலம் ஆகியவற்றை வரதட்சணையாக பூஜா தோமரின் தந்தை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு மேலும் வரதட்சணை கேட்டு ராணுவ வீரரும், அவரது குடும்பத்தினரும் பூஜாவை கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பல முறை தனது தந்தையிடம் பூஜா கூறியபோதிலும், சற்று பொறுத்துக் கொள்ளுமாறே அவர் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவி பூஜாவை ராணுவ வீரர் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக ரூ.10 லட்சத்தை கொண்டு வருமாறு கூறி இரும்புக் கம்பியால் பூஜாவை அவர் தாக்கியிருக்கிறார். அடி தாங்க முடியாமல் மயக்கம் அடைந்த பூஜாவை எழுப்புவதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது விரலை ராணுவ வீரர் வெட்டியுள்ளார். இதனால் அலறித் துடித்த பூஜாவின் சத்தத்தை கேட்டுப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணுவ அதிகாரிகள் அங்கு வந்து பூஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

இதுகுறித்து பூஜாவின் தந்தை சுதேஷ் பால் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.  ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பூஜாவின் பெற்றோர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில், காவல்துறையினரின் நடவடிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விஷயத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குப் பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சமரசம் செய்யக் காவல்துறையினர் எங்களை வற்புறுத்தினர்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: TimesOfIndia

யாரை மிரட்டுகிறார் ஜக்கி கம்பி எண்றதுதான் பாக்கி | Surya Xavier Interview

உ.பி: வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர் – வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக காவல்துறை மீது பெண்ணின் தந்தை புகார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்